என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வரி ஏய்ப்பு"
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஸ்ரீஅம்பாள் ஹார்டுவெர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கான சிமெண்ட், கம்பிகள் மற்றும் தளவாட பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி நகை அடகு கடையும் வைத்து நடத்தி வருகின்றனர். பல முன்னணி நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்யும் டீலராக உள்ளனர்.
இந்நிறுவனம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முறையாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை. மேலும் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடு செய்ததாக புகார்கள் வந்தன.
இதனையடுத்து மதுரை வருமானவரித்துறை இணை ஆணையர் தலைமையில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் அந்த நிறுவனத்துக்கு வந்தனர்.
தலைமை அலுவலகம், குடோன்கள், உரிமையாளர், அவரது மகன்கள், மேலாளர் வீடு உள்பட 8 இடங்களில் இக்குழுவினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக நீடித்து இன்று காலை முடிந்தது. சோதனையின் முடிவில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர். சோதனை நடந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். இதில் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் வருமானத்தை மறு ஆய்வு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
2011, 2012-ம் ஆண்டுகளில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கண்டறியப்பட்டிப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி ரூ.300 கோடி வரையிலான வருமானத்தை மறைத்து ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறு ஆய்வு செய்யும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சோனியா, ராகுல்காந்தி தரப்பில் அப்பீல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சோனியா, ராகுல் தரப்பில் முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த வக்கீலுமான ப. சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, மறு ஆய்வு தவறான முறையில் செய்யப்பட்டுள்ளது. பல விஷயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் ஆய்வு செய்து ரூ.146 கோடி வரை வருமானம் இருந்ததாக முடிவுக்கு வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் லாபநோக்கத்தோடு நடத்தப்பட்டது அல்ல. அது ஒரு அறக்கட்டளை அமைப்பு. அதிலிருந்து வட்டியோ, வருமான பங்குகளோ வழங்குவது இல்லை. மேலும் அந்த நிறுவனம் ரூ.90 கோடி கடனில் உள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரூ.407 கோடி சொத்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
இது சம்பந்தமாக ஜனவரி 29-ந்தேதிக்குள் சோனியா, ராகுல்காந்தியும் வருமான வரித்துறையும் விளக்கம் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். #taxevasion #soniagandhi #rahulgandhi
கன்னட நடிகர்கள் உள்பட 8 பேரின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது. ரூ.11 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர், ஜெயண்ணா, சி.ஆர்.மனோகர் எம்.எல்.சி. ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. சிவராஜ் குமாரின் வீட்டில் இருந்து 2 பைகளில் அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.
நடிகர் யஷ் வீட்டில் 30 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த சோதனையின்போது வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகின. இது கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 180 பேர் கன்னட திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 21 இடங்களில் கடந்த 3-ந் தேதி சோதனை நடத்தினர். திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்ததில் வரு மானத்தை மறைத்தது, திரைப்படத்திற்கு கணக்கில் வராத பணம் செலவு செய்யப்பட்டது, திரையரங்குகளில் வசூலான பணம், நடிகர்கள் பெற்ற சம்பளம் ஆகியவற்றை கணக்கில் காட்டாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டப்படாத 25.3 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.2.85 கோடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.11 கோடி. மேலும் ரூ.109 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயநகரை சேந்தவர் ஸ்ரீனிவாசரெட்டி. தொழில் அதிபரான இவர் பாலாஜி குழுமம் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பூந்தமல்லி அருகில் மதுபான ஆலை உள்ளது.
இந்த குழுமத்தின் தலைமை அலுவலகம் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 150 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாலாஜி குழு நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நேற்று முன்தினம் மாலை அதிரடி சோதனையில் இறங்கினார்கள்.
மதுபான ஆலை, பாலாஜி குழுமத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசரெட்டி இல்லம், நிர்வாகிகள், மேலாளர்கள் உள்பட முக்கிய அதிகாரிகளுடைய இல்லம், குழுமத்தின் தலைமை அலுவலகம் ஆகிய இடங்கள் வருமான வரித்துறை சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன.
நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய நடந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களும், கணக்கில் வராத ரூ.40 கோடியும் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கடந்த மாதம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஹாங்காங் பகுதிகளில் இருந்து சட்ட விரோதமாக விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ தங்க கட்டிகள் மற்றும் ரூ.11.16 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தென் கொரியாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஹவாலா பண பரிமாற்ற விவகாரத்தில் பாலாஜி குழுமத்துக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. #ITRaid
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்